LATEST NEWS
படப்பிடிப்புக்கு நடுவே கூலாக படம் பார்த்த நடிகர் ரஜினி…. செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்…. வைரல்….!!!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன்,கே எஸ் ரவிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது சென்னையிலேயே பிரம்மாண்டஸ் செட் அமைத்து சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ரஜினி சூப்பர் ஹிட் படமான பாபா மீண்டும் புதுப்பிக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்புக்கு நடுவே நடிகர் ரஜினி ஏ ஆர் ரகுமானின் le musk படத்தைப் பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஏ ஆர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
