LATEST NEWS
நீங்க ரொம்ப ஓவர் ஆக்டிங் பண்றீங்க…. ரசிகரின் கேள்விக்கு ஒரே வரியில் பதிலடி கொடுத்த சிவாங்கி….!!!!
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகிறார். இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான்.
சினிமாவில் பல பாடல்களை பாடிவரும் இவர் சிவகார்த்திகேயனின் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அடிக்கடி பதில் சொல்லி வருகிறார். நீங்கள் செய்வது பயமுறுத்தும் ஓவர் ஆக்டிவாக உள்ளது என்று சொன்னால் உங்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்த சிவாங்கி இவ்வாறு தான் இருக்கும் என்று ஒரு எமோஜி பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் நான் அதிகமாக நெகட்டிவ் ஆக வரும் கமெண்ட்களை பார்ப்பதில்லை எனவும் இதையெல்லாம் கேட்டு உணர்ச்சியற்றவராக மாறிவிட்டேன், முன்பெல்லாம் இதை நினைத்து வருத்தப்படுவேன் தற்போது இது பழகி விட்டது எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது அந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
https://twitter.com/sivaangi_k/status/1603381176051601408
