LATEST NEWS
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய நாயகி?…. ஷாக்கான ரசிகர்கள்…. என்ன காரணம் தெரியுமா….???
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி. இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது. வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான்.
தினம்தோறும் புது புது திருப்பங்களுடன் சீரியல் மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஒரு நாயகி விலகப்போவதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரில் வெயிட்டான வில்லி வேடம் கிடைத்திருப்பதால் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது இவர் சீரியலில் இருந்து விலக உள்ளதாக வெளியாகி உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
