LATEST NEWS
பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக…. அதிக பணத்தை அசால்டாக தட்டி தூக்கி அமுதவாணன்…. எவ்வளவு தெரியுமா….????
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 100 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அசீம் அல்லது விக்ரமன் தான்வெற்றியாளர்கள் என்று ஏற்கனவே ரசிகர்கள் கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்ட நிலையில் பிக்பாஸ் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அனைத்து சீசங்களிலும் வந்த பணப்பெட்டி இந்த சீசனில் இரண்டாவது முறையாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில் அதிலிருந்து தொகையும் அதிகமாக இருந்துள்ளது. அதாவது பணப்பெட்டியில் இருந்த 13 லட்சத்தை தொட்டு அமுதவாணன் பணப்பெட்டியை அசால்ட் ஆக தட்டி தூக்கி உள்ளார். இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன் களில் கவின், கேப்ரில்லா மற்றும் சிபி ஆகியோர் பணப்பெட்டியை எடுத்துச் சென்ற நிலையில் இந்த சீசனில் கதிரவன் பணம் மூட்டையையும், அமுதவாணன் பணப்பெட்டியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று லட்சம் தொகையுடன் வந்த பணப்பெட்டியின் மதிப்பு ஒரு நிமிடத்திற்கு 2500 ரூபாய் கூடிக்கொண்டே இருந்த நிலையில் 13 லட்சத்தை எட்டியவுடன் அந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிய நபர் அமுதவாணன் தான் என்று கூறப்படுகிறது.
