சீரியல் நடிகை ஜனனியா இது?…. ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியல் நடிகை ஜனனியா இது?…. ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியல்கள் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அப்படி சின்னத்திரை சீரியலில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார். விஜய் டிவியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா நடித்த மாப்பிள்ளை சீரியல் மூலம் பிரபலமான ஜனனி அதனை தொடர்ந்து ஆயுத எழுத்து,மௌன ராகம் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகின்றார். இடையே சிறிது காலம் காணாமல் போன ஜனனி தற்போது முகம் மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் ஜனனியா இது என்று ஷாக் ரியாக்ஷன் கொடுத்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in