LATEST NEWS
சூர்யா – ஜோதிகாவை நேரில் சந்தித்த பிரபல நடிகர்…. எதற்காக தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதனிடையே சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 திரைப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக நிச்சயம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சூர்யா ஜோதிகாவின் மலையாள நடிகர் பிரித்விராஜ் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த சந்திப்பு தளபதி 67 செட்டில் நடந்ததா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
