LATEST NEWS
அடடே செம கெத்தா இருக்காரே…. தளபதி 67 படத்திற்காக புதிய லுக்கில் கலக்கும் நடிகர் அர்ஜுன்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 படப்பிடிப்பு தற்போது நடைபெற்ற வருகிறது. இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இந்த படத்தில் அமைகின்றது.
இந்தத் திரைப்படத்தில் திரிஷா, கௌதம் மேனன், அர்ஜுன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதற்காக அர்ஜுன் புதிய லுக்கில் உள்ளார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
