LATEST NEWS
இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா?…. புகைப்படம் (உள்ளே)….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித்.இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படம் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை அள்ளிக் கொடுத்துள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஏகே 62 திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அஜித்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
