LATEST NEWS
குழந்தைகள் இல்லாமல் குலதெய்வ கோவிலுக்கு சென்ற நயன் – விக்கி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.
இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த வருடம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தனர்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு முறைப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்தனர்.
இதனை தொடர்ந்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா தனது மகன்களின் முழு பெயரை அறிவித்துள்ளார்.
அதாவது உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தனது இரண்டு மகன்களின் பெயரையும் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது மனைவியுடன் கும்பகோணம் வலத்தூர்ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சென்றுள்ளார்.
எந்த விசேஷம் நடந்தாலும் தனது குலதெய்வ கோவிலுக்கு செல்லும் விக்னேஷ் சிவன் இன்று பங்குனி உத்திரம் என்பதால் தொழில் மற்றும் குடும்ப ரீதியான சருக்கல்களை போக்க குலதெய்வ வழிபாடு செய்து பரிகாரம் செய்ய சென்றுள்ளார்.
ஆனால் பூஜைக்கு தங்களின் இரட்டை குழந்தைகளை அவர்கள் அழைத்து வரவில்லை. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
