LATEST NEWS
பரியேறும் பெருமாள் நடிகர் கதிரின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான புகைப்படங்கள் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மனதை கவர்ந்த நடிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகர் கதிர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் கதிர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் மதயானை கூட்டம்.
இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர்தான் நடிகர் கதிர்.
அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிருமி, என்னோடு விளையாடு மற்றும் விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்தார்.
ஆனால் எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு மக்கள் மத்தியில் பேரையும் புகழையும் பெற்றுத் தரவில்லை என்று தான் கூற வேண்டும்.
அதன் பிறகு இவர் நடித்த பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் தான் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியதற்கு முக்கிய காரணம்.
இவர் தற்போது தலைக்கூத்தல் என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கென தற்போது ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது.
இந்நிலையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சஞ்சனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்தில் இயக்குனர் அட்லி உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்களும் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தற்போது கதிர் மற்றும் சஞ்சனா தம்பதியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
