LATEST NEWS
தனது ரசிகர்களுக்கு நடிகர் Simbu கொடுத்த பிரியாணி Treat…. இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு.
தன்னுடைய அயராத உழைப்பால் பன்முகத் திறமைகளை கொண்ட கலைஞராக தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கிறார்.
மாஸ் படங்களாக இருந்தாலும் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக இருந்தாலும் இளைஞர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் அட்டகாசமான கதைக்களம் படமாக இருந்தாலும் அதில் நடிகர் சிம்பு தனித்து தெரியும் அளவிற்கு வளர்ந்தவர்.
இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இடையில் சில காலம் பட வாய்ப்புகள் குறைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல்கள் இருந்ததால் தமிழ் சினிமாவில் தோன்றாமல் இருந்தார்.
அதன் பிறகு தன்னுடைய உருவத்தை வருத்தி மீண்டும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அதாவது மாநாடு மற்றும் வெந்து அணிந்தது காடு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனை தொடர்ந்து இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்து தல திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகும் புதிய படம் ஒன்றில் சிம்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே நடிகர் சிம்பு தன்னுடைய ரசிகர்களை அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆனால் சில வருடங்களாக அந்த நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது ரசிகர்களை சிம்பு சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு சிம்பு அழைப்பு விடுத்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் உரையாடிய சிம்பு பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அது மட்டுமல்லாமல் அனைவருக்கும் மதிய விருந்தாக பிரியாணி வழங்கப்பட்டது.
மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நடிகர் சிம்பு அவர்கள் விருந்து நடைபெறும் இடத்திற்கு சென்று தன் கையால் தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து வைத்து உபசரித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
