இதை சாப்பிடும் வரை உங்கள் உடலில் உள்ள இரும்புச் சத்து குறையவே குறையாது.. அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில் நீங்களே பாருங்கள்…? – cinefeeds
Connect with us

Uncategorized

இதை சாப்பிடும் வரை உங்கள் உடலில் உள்ள இரும்புச் சத்து குறையவே குறையாது.. அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில் நீங்களே பாருங்கள்…?

Published

on

நேந்திரபழம் இரும்புச் சத்துக்களை உடலுக்கு கொடுக்கும்..

கேரளாவில் அபரிமிதமாக விளையும் பழம் இது. நேந்திரன் சிப்ஸ் புகழ்பெற்றது. மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்டது இப்பழம். இந்த பழத்தில் நல்ல சத்துக்கள் அதிகளவு உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழம் இது.

Advertisement

இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும். உடல் மெலிந்தவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும். அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். துண்டுகளாக்கிய பழத்தை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும். பின்பு இதனுடன் நெய்யை கலந்து 48 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்தவர்கள் திடகாத்திரத்துடன் உடல் எடை கூடுவார்கள்.

 

Advertisement

நேந்திரன் மூளையின் செல்களுக்கு வலுவூட்டி நினைவுகள் சிதறாமல் பாதுகாப்பதாக ஆராய்ந்து தெரிந்துள்ளார்கள். சிப்ஸ், ஜாம், வற்றல் சுவையாக இருக்கும் என்று அளவுக்கு அதிகமாக உண்டால் மந்தம் ஏற்படும். இதனை பழமாக சாப்பிட்டால் தான் முழு பலனையும் பெற முடியும். எனவே பழமாக சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியம் பெறுங்கள்.

கேரளத்திலும், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. நேந்திரன் வாழைமரமானது 15 அடி முதல் 20 அடிவரை உயரம் வளரக்கூடியது. குலைக்கு 10 முதல் 12 சீப்புகள் வரும். ஒரு சீப்பில் 12 முதல் 18 காய்கள்வரை காய்க்கும்.

Advertisement

இதை சாப்பிட்டு பாருங்கள்… உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in