LATEST NEWS
90 கிட்ஸ் ஃபேவரட் செய்தி வாசிப்பாளர் ரத்னாவின்…. அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ….!!!
சன் தொலைக்காட்சி என்பது பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு டிவி சேனல்.
இதில் 90களில் வந்த சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என அனைத்துமே ரசிகர்கள் மனதில் இன்றும் மறவாத இடம் பிடித்துள்ளன.
அது மட்டுமல்லாமல் அந்த சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களையும் இன்றும் எவராலும் மறக்க முடியாது.
இப்போது மக்கள் அவர்களை வியந்து பார்ப்பார்கள். அப்படி சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர்தான் ரத்னா.
இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 90களில் கலக்கிய பிரபலங்களான பெப்சி உமா,விஜய சாரதி போன்ற பிரபலங்கள் பலரும் சமீப காலமாக ரீ என்ட்ரி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் டாப் 10 தொகுத்து வழங்கபவராகவும் இருந்தவர் தான் ரத்னா.
இருந்தாலும், இது அவருடைய பார்ட் டைம் ஜாப் தான். இவர் கார்மென்ட் பிஸினஸ் தான் முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறார்.
இவரைப் பற்றி அண்மையில் சில புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையில் ரத்னாவிற்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும்ஒரு மகள் உள்ளனர்.
தற்போது ரத்னாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்து ரசிகர்கள் ரத்னாவிற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் உள்ளனரா என வியந்து பார்த்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
