“விசுவாசத்தின் உச்சம்!.. எஜமானரின் குடும்பத்தைக் காப்பாற்ற விஷப்பாம்புடன் மல்லுக்கட்டிய நாய்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விசுவாசத்தின் உச்சம்!.. எஜமானரின் குடும்பத்தைக் காப்பாற்ற விஷப்பாம்புடன் மல்லுக்கட்டிய நாய்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகேயுள்ள கோத்தபள்ளி பகுதியில், வளர்ப்பு நாய் ஒன்று தனது எஜமானரின் குடும்பத்தினரை ஆபத்திலிருந்து மீட்க, உயிரைப் பொருட்படுத்தாமல் விஷப்பாம்புடன் சண்டையிட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்ரீநிவாஸ் என்பவரது வீட்டிற்குள் காலி மனையிலிருந்து அத்துமீறி நுழைய முயன்ற ஆக்ரோஷமான நாகப்பாம்பை, அவர் வளர்த்து வந்த பாக்ஸர் இன நாய் தடுத்து நிறுத்தியுள்ளது. குடும்பத்தினர் அலறியதைக் கேட்டு உஷாரான அந்த நாய், பாம்பை மேலும் வீட்டிற்குள் விடாமல் தடுத்து, அதனுடன் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுள்ளது.

இந்தக் கடுமையான சண்டையின்போது, நாய் எதிர்பாராத விதமாகப் பாம்பின் தலையைக் கவ்வி கடித்ததில் அந்த நாகப்பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இருப்பினும், பாம்பின் தலையைக் கடித்ததால் நாயின் உடலுக்குள் விஷம் பரவி, அது நிலைகுலைந்து சரிந்தது. உடனடியாகத் தங்களது செல்ல நாயை மீட்ட ஸ்ரீநிவாஸ் குடும்பத்தினர், சிகிச்சைக்காகக் காக்கிநாடாவில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எஜமானரின் குடும்பத்தைக் காக்க நாய் காட்டிய இந்த விசுவாசமும், வீரமும் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in