CINEMA
சமந்தா விவகாரத்தை கச்சிதமாக கணித்த பிரபல ஜோதிடர்…. இப்போ புது வாழ்க்கை குறித்து போட்ட பதிவு வைரல்…!!
நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் வருடம் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆனது நான்கு வருடத்தில் முடிவுக்கு வந்து விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் நாக சைதன்யா சோபிதா துபாலிபாலா என்ற நடிகை நிச்சயதார்த்தம் செய்துள்ளார் .இது குறித்த புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலாகி வந்தது.
இதனையடுத்து நாகசைதன்யா குறித்த தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் சமந்தாவை நாகசைதன்யா விவகாரத்தை பெற்றபோது கச்சிதமாக கணித்த ஜோதிடர் வேணு சுவாமி, தற்போது புது வாழ்க்கை குறித்த பதிவு ஒன்று போட்டுள்ளார். அதாவது நாக சைதன்யா மற்றும் சோபிதா துபாலாவின் ஜாதகங்களை ஆய்வு செய்து அவர்களுக்கான எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்று கூறப் போவதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களுடைய வாழ்க்கை எப்படி அமைகிறது? என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.