LATEST NEWS
பிரிந்த மனைவியுடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த பிரபல தமிழ் நடிகர்…. மகிழ்ச்சியில் வாழ்த்தும் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான சிறுத்தை சிவாவின் சகோதரர்தான் பாலா. இவர் அஜித் நடித்த வீரம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு அமிர்தா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு டாக்டர் எலிசபெத் என்பவரை பாலா மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக அண்மையில் செய்தி வெளியானது. இருந்தாலும் இருவரும் விவாகரத்து செய்தது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி உள்ள மலையாள திரைப்படம் ஒன்றை பார்ப்பதற்கு தனது இரண்டாவது மனைவி எலிசபெத்துடன் திரையரங்கிற்கு வந்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நடிகர் பாலா தனது மனைவியுடன் மீண்டும் இணைந்து விட்டதாக கருதி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.