LATEST NEWS
“மனிதநேயம் இன்னும் சாகவில்லை..” பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்த ஆசிரியைபழைய மாணவன் செய்த நெகிழ்ச்சியான காரியம்.. கலங்க வைக்கும் பின்னணி..!!
கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒரு காலத்தில் சிறந்த கணித ஆசிரியையாகப் பணியாற்றிய பெண்மணி ஒருவர், பணி ஓய்வுக்குப் பின் தன் சொந்தக் குடும்பத்தினராலேயே கைவிடப்பட்டு, ரயில் நிலைய நடைமேடையில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு நாள் அந்த ரயில் நிலையத்திற்கு வந்த அவருடைய பழைய மாணவன் ஒருவன், பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்மணி தன் கணித ஆசிரியை தான் என்பதை அடையாளம் கண்டு அதிர்ச்சியடைந்தார். தன் குடும்பத்தினர் தம்மைக் கைவிட்டுவிட்டதாகவும், எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பாததால் வேறு வழியின்றி இங்கு வந்துவிட்டதாகவும் ஆசிரியை கண்ணீருடன் கூறியதைக் கேட்டு அந்த மாணவன் மனமுடைந்து போனான்.
உடனடியாக அந்த மாணவன் தன் ஆசிரியையைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவருக்கு உணவும் உடையும் வழங்கிப் பராமரித்தான். மேலும், ஆசிரியையின் எதிர்காலப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, அவரிடம் கணிதம் கற்ற மற்ற அனைத்துப் பழைய மாணவர்களையும் தொடர்புகொண்டு விபரத்தைக் கூறினான். ஆசிரியையின் நிலையை அறிந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அவர் தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியை நிம்மதியாகக் கழிப்பதற்காக ஒரு சிறந்த இல்லத்தில் அவரைப் பத்திரமாகச் சேர்த்தனர். சொந்தக் குடும்பமே கைவிட்ட போதிலும், தான் ஒரு காலத்தில் கற்பித்த மாணவர்களின் ஆதரவாலும் அரவணைப்பாலும் அந்த ஆசிரியைக்கு மறுவாழ்வு கிடைத்தது, மனிதநேயத்திற்கும் குரு-சீடன் இடையேயான புனிதமான பிணைப்பிற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
