LATEST NEWS
“பள்ளி கல்வித்துறையில் அரங்கேறிய மாபெரும் வரலாற்றுத் துரோகம்..?!” 2027-28 புதிய பாடத்திட்டத்தால் கொந்தளிக்கும் தமிழக மக்கள்.. பரபரப்பு பின்னணி..!!
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்ட வரைவில் மூவேந்தர்களில் ஒருவரான சேரர்களின் வரலாறு முழுமையாக விடுபட்டிருப்பது கல்வி மற்றும் அரசியல் வட்டாரத்தில் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள 2027-2028ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடத்திட்ட வரைவில், 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் வரலாற்றுப் பாடத்தில் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் எல்லைப் பகுதிகளைத் திறம்பட ஆட்சி செய்த சேரர்களின் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்படுவதாக வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பலத்த கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கேரளப் பாடத்திட்டங்களில் சேரர்கள் குறித்த தவறான வரலாறு கற்பிக்கப்படும் சூழலில், தமிழகப் பாடப்புத்தகங்களிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டால் எதிர்காலத்தில் “சேரர்கள் தமிழர்கள் அல்ல” என்ற பொய்யான பிம்பம் உருவாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தமிழர்களின் தொன்மையான மற்றும் துல்லியமான வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்குக் கடத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, இந்த வரலாற்று விடுபாட்டை உடனடியாகச் சரிசெய்து, வரவிருக்கும் புதிய பாடப்புத்தகங்களில் சேரர்களின் வரலாற்றைக் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன.
