நள்ளிரவு 2 மணிக்கு பயங்கரம்.. எமனாக வந்த மெர்சிடிஸ் கார்.. ஸ்கூட்டர் ஓட்டுனருக்கு கொடூர கதி.. ஸ்டேரிங்கை பிடித்த 17 வயது சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவு 2 மணிக்கு பயங்கரம்.. எமனாக வந்த மெர்சிடிஸ் கார்.. ஸ்கூட்டர் ஓட்டுனருக்கு கொடூர கதி.. ஸ்டேரிங்கை பிடித்த 17 வயது சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

கேரள மாநிலம் கொச்சியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சொகுசு மெர்சிடிஸ் கார் ஒன்று ஸ்கூட்டரின் பின்புறமாக அதிவேகமாக மோதியதில், ஜெய் பாலகிருஷ்ணன் (55) என்ற ஸ்கூட்டர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது ஒரு 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இந்த சொகுசு கார் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், கார் ஓட்டிய சிறுவன் அந்த நீதிபதியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. நள்ளிரவு 2 மணி முதல் 3 மணிக்குள் நடந்த இந்த கொடூர விபத்தில், காரின் முன்பகுதி முழுமையாக நொறுங்கியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக காவல் நிலையத்தில் நீதிபதியின் குடும்பத்தினர் நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மைனர் சிறுவனை நள்ளிரவில் கார் ஓட்ட அனுமதித்தது குறித்து உயிரிழந்த ஜெய் பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அங்கு வந்த நீதிபதி, தங்களை மிகவும் அவமரியாதையான மற்றும் இழிவான தொனியில் பேசியதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது போலீசார் இந்த விபத்து மற்றும் சிறுவனுக்குக் கார் கொடுத்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in