48 வருஷமா தண்ணியே குடிக்கல.. தினமும் 5 கேன் கோக்.. உலகக் கோடீசுவரர் வாரன் பஃபெட்டின் வியக்கவைக்கும் ரகசியம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

48 வருஷமா தண்ணியே குடிக்கல.. தினமும் 5 கேன் கோக்.. உலகக் கோடீசுவரர் வாரன் பஃபெட்டின் வியக்கவைக்கும் ரகசியம்..!!

Published

on

அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளரும் உலகின் பெரும் கோடீசுவரருமான வாரன் பஃபெட் (வயது 96), கடந்த 48 ஆண்டுகளாகத் தனது வாழ்நாளில் ஒரு முறை கூட தண்ணீரே குடித்ததில்லை என்ற ஆச்சரியமூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு கோடீசுவரரான பில் ஆக்மேன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், இரவு விருந்தின் போது தான் கொடுத்த தண்ணீரை வாரன் பஃபெட் மறுத்ததாகவும், தனக்கு தண்ணீரை விட சோடாவே அதிகம் பிடிக்கும் எனக் குறிப்பிட்டதாகவும் இந்த இரகசியத்தை உடைத்துள்ளார்.

வாரன் பஃபெட் தினமும் 5 கேன்கள் வரையிலான கோக் (Coke) பானங்களைக் குடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் பல ஆண்டுகளாக பெப்சி குடித்து வந்த அவர், பின்னர் தனது பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ஆலோசனையின் பேரில் செர்ரி கோக் குடிக்க மாறியுள்ளார். இதனால் பில் ஆக்மேன் தனது வீட்டிற்கு வாரன் பஃபெட் வரும்போதெல்லாம் அவருக்காக பிரத்யேகமாக செர்ரி கோக் வாங்கி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

Advertisement

இது குறித்து முன்பு ஒருமுறை ‘பார்ச்சூன்’ நாளிதழுக்கு வாரன் பஃபெட் அளித்த பேட்டியில், “நான் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ளும் 2,700 கலோரி உணவில், கால் பங்கு அளவு கோக் பானத்தின் மூலமே எனக்குக் கிடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 96 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு உலகப் பணக்காரர் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்துவிட்டு சோடா பானங்களை நம்பியிருப்பது தற்பொழுது இணையத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in