“இது என்ன மாயம்…” செத்துவிட்டதாக நினைத்த மூதாட்டி திடீரென மூச்சுவிட்டு எந்திரித்த விநோதம்..! 100 வயது பாட்டிக்கு நடந்த மிராக்கிள் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது என்ன மாயம்…” செத்துவிட்டதாக நினைத்த மூதாட்டி திடீரென மூச்சுவிட்டு எந்திரித்த விநோதம்..! 100 வயது பாட்டிக்கு நடந்த மிராக்கிள் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் உள்ள பனியாணா மொஹல்லாவைச் சேர்ந்தவர் சுகே கான். இவரது மனைவி ஜமீலா பேகம், தனது வாழ்நாளின் 100-வது வயதில் காலடி எடுத்து வைத்திருந்தார். கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருந்து வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவரது மூச்சு நின்றது. இதனால் அவர் இறந்துவிட்டதாகக் கருதிய குடும்பத்தினர் கதறி அழுததுடன், உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினர்.

சுமார் ஒரு மணி நேரம் கடந்த நிலையில், குடும்பத்தினர் அவரை குளிப்பாட்டி மயானத்திற்கு எடுத்துச் செல்லத் தயாரானார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஜமீலா பேகத்தின் உடலில் அசைவு ஏற்பட்டு மீண்டும் மூச்சு விடத் தொடங்கினார். உடனடியாக அவரைத் தூக்கி கட்டிலில் கிடத்தினார்கள். இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி திடீரென உயிர்ப் பெற்று எழுந்ததைக் கண்ட குடும்பத்தினரும், உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் கடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

Advertisement

ஜமீலா பேகத்திற்கு டிம்மா கான், பூரா கான் மற்றும் கருவா கான் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதனை குறித்து அவரது மூத்த மகனான டிம்மா கான் கூறுகையில், தனது தாயார் கடந்த ஒரு மாதமாகவே படுக்கையில்தான் இருந்து வந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை காலை அவர் இறந்துவிட்டதாக நினைத்து இறுதிச் சடங்குச் சடங்குகளைத் தொடங்கிய நிலையில் திடீரென அவரது சுவாசம் திரும்பியதாகவும் தெரிவித்தார். தற்போது இந்த வியக்கத்தக்க சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in