“அம்மான்னா சும்மா இல்லைடா..”ஆம்புலன்ஸ் வர முடியாத கிராமம்… மகளின் உயிரைக் காப்பாற்ற 7 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற தாய்.. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மான்னா சும்மா இல்லைடா..”ஆம்புலன்ஸ் வர முடியாத கிராமம்… மகளின் உயிரைக் காப்பாற்ற 7 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற தாய்.. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்..!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததாலும், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஆம்புலன்ஸ் வராததாலும், ஒரு தாய் தனது 12 வயது நோய்வாய்ப்பட்ட மகளைத் தன் தோளில் சுமந்தபடி 7 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

ஷ்ருங்கவரபுகோட்டா மண்டலத்திற்குட்பட்ட பல்லாபு துங்கடா கிராமத்தைச் சேர்ந்த ஜன்னி சுகரம்மா மற்றும் கன்னையா தம்பதியினரின் மகள் சம்பூர்ணா திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கிராமத்திற்குள் அவசர ஊர்திகளோ அல்லது வேறு வாகனங்களோ வர முடியாத சூழலில், தனது மகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் அந்தத் தாய் வேறு வழியைத் தேடத் தொடங்கினார்.

Advertisement

இதையடுத்து, அந்தத் தாய் தனது மகளைத் தோளில் சுமந்தபடியே மலைப்பகுதியிலிருந்து 7 கி.மீ தூரம் நடந்து கீழே வந்து, அங்கிருந்து ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் அதேபோல மகளைத் தோளில் சுமந்தபடியே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக கிராமத்திற்குச் சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டதால், கிராம மக்கள் மருத்துவ அவசர காலங்களில் இதுபோன்று கடும் இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in