LATEST NEWS
திக் திக் நிமிடங்கள்..! சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்ட பள்ளி கூரை… அப்பளம் போல் நொறுங்கிய கார்கள்..! கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்… பகீர் வீடியோ..!!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் உளிக்கல் நகரில் திடீரென வீசிய பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கனமழை காரணமாகப் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உளிக்கல் அருகே உள்ள வயத்தூர் யு.பி பள்ளியின் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட வளைவு வடிவ கூரை, காற்றுடன் வீசிய சூறாவளியில் முற்றிலுமாகப் பெயர்ந்து பறந்து சென்று பின்னால் இருந்த கட்டடத்தின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது.
இந்த விபத்தில் கூரையின் அடியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் முற்றிலுமாக நொறுங்கிச் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டாலும், லட்சக்கணக்கில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. இரிட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலும் பலத்த காற்று வீசியதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். பேரழிவைக் காட்டும் இந்தச் சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
