அடக்கடவுளே.. ஃபேஸ்புக்கில் நகைகளைக் காட்டி ரீல்ஸ் செய்த பெண்… அண்டைவீட்டுக்காரர் செய்த கொடூர காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னான..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே.. ஃபேஸ்புக்கில் நகைகளைக் காட்டி ரீல்ஸ் செய்த பெண்… அண்டைவீட்டுக்காரர் செய்த கொடூர காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னான..!!

Published

on

சமூக ஊடகங்களில் தனது ஆடம்பர வாழ்க்கையையும் நகைகளையும் காட்டி பெருமை பேசிய பெண் ஒருவர், அவரது சொந்த அண்டை வீட்டாராலேயே கடத்தப்பட்டு, காரோடு சேர்த்து உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் இந்திரமாயு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் மனைவியான கோமரியா (45) என்ற அந்தப் பெண், கடந்த திங்கட்கிழமை அன்று காலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது ஆடம்பர வீட்டிற்குள் புகுந்த அண்டை வீட்டார் சிலர், அவரைத் தாக்கி 500 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்ததோடு, அவரது அலறல் சத்தம் வெளியே கேட்காதவாறு காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்தப் பெண், அவர் வைத்திருந்த மிட்சுபிஷி எக்ஸ்பாண்டர் காரின் உள்ளே வைத்து உயிரோடு தீக்கிரையாக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கருகிய நிலையில் இருந்த காரையும், அதற்குள் இருந்த பெண்ணின் சடலத்தையும் மீட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சமூக ஊடக பதிவுகளைப் பார்த்து ஆசைப்பட்ட அண்டை வீட்டாரே இந்தத் திட்டமிட்ட கொள்ளை, கடத்தல் மற்றும் கொலையை அரங்கேற்றியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைப் பிடித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in