LATEST NEWS
“சொர்க்கமும் இல்லை.. பிரகாசமான ஒளியும் இல்லை… நான் கண்டது அதைத்தான்..” மரணத்தின் விளிம்பிற்குச் சென்று திரும்பிய இளைஞர் சொன்ன மர்ம உலகம்..!!
மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது? என்ற கேள்வி மனித குலத்திற்கு எப்போதும் இருந்து வரும் ஒரு பெரிய ரகசியமாகும். சமீபத்தில் வெளிவந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 19 வயது இளைஞர் ஒருவர் சுமார் 15 நிமிடங்கள் வரை மாரடைப்பு அல்லது மூச்சுநின்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் மீண்டும் உயிரோடு திரும்பிய நிலையில், மரணத்தின் எல்லைக்கு அப்பால் உள்ள அந்த உலகத்தின் மர்மங்களையும் உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். இது அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவ ரீதியாக ஒருவரின் மூச்சு நின்றால் அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுவார். இருப்பினும், மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வருபவர்கள் கூறும் அனுபவங்கள் பலரை ஆச்சரியப்படுத்துகின்றன. ‘டெயிலி ஸ்டார் யூகே’ அறிக்கையின்படி, போதைப்பொருள் அதிகளவில் உட்கொண்டதால் இந்த இளைஞரின் மூச்சுப் பேச்சு 15 நிமிடங்கள் வரை நின்றுவிட்டது. உடனடியாக அவரது சகோதரர் சிபிஆர் அளித்ததுடன், மருத்துவர்களின் தீவிர முயற்சியால் மீண்டும் அவரது இதயத்துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது. நினைவு அடைந்ததும் அவர் அந்த மறுலோக அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
திரைப்படங்களில் காட்டுவது போல இறப்பிற்குப் பிறகு பிரகாசமான வெள்ளை வெளிச்சமோ அல்லது சுவர்க்கத்திற்குச் செல்லும் வழியோ தனக்குத் தெரியவில்லை என்று அந்த இளைஞர் கூறினார். மாறாக, தனக்கு எந்தவொரு ஒளியோ கடவுளோ தென்படவில்லை என்றும், ஒரு ஆழமான இருளும் ஆழ்ந்த அமைதியும் சூழ்ந்த உலகத்தில் தான் தொலைந்து போனதாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார். தன் உடல் அசைவற்றுக் கிடந்ததையும், தன் சகோதரன் தன்னை மீட்கப் போராடியதையும் அவர் அறிந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட 3 முதல் 4 வாரங்கள் கோமா நிலையில் இருந்து குணமடைந்த பிறகு, அவரது வாழ்க்கையைப் பார்க்கும் கண்ணோட்டமே முழுமையாக மாறியது. இந்த திகிலூட்டும் அனுபவத்திற்குப் பிறகு அவர் தனது அனைத்து தீய பழக்கங்களையும் கைவிட்டதுடன், அவருக்கு இருந்த மரண பயமும் முற்றிலுமாக நீங்கிவிட்டது.
