LATEST NEWS
அமீரை காதலித்து ஏமாற்றிய பாவனி?… அவரே வெளியிட்ட பதிவு… பார்த்ததும் ஷக்கான ரசிகர்கள்…!!

தனது நடனத்தை உயிர் மூச்சாக கொண்டு பிரபல தொலைக்காட்சியில் சாதித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அமீர். இவர் மீடியாவில் நுழையும் போது நடனம் மட்டும் தான் இவருக்கு தெரியும். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான பாவனியை காதலித்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
இவர்கள் இருவரும் தற்போது காதல் ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் துணிவு திரைப்படத்தில் கூட இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது ஒரே பிளாட்டில் பாவணி அமீருடன் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு பாவனியின் அம்மா கூறிவிட்டதாகவும் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக ஹோம் டூர் வீடியோவில் பாவனி கூறி இருந்தார்.
இந்நிலையில் பாவனி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்த நிலையில் அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் கமிட்டடா என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பாவனி இல்லை நான் சிங்கிள் தான் என்று பதிலளித்துள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பாவணி அமீரை காதலித்து ஏமாற்றி விட்டாரா என கேள்வி கேட்டு அந்த பதிவை வைரலாகி வருகிறார்கள்.