LATEST NEWS
2 கோடி பட்ஜெட், வசூல் மட்டும் இத்தனை கோடியா?… விஜய் தேவரகொண்டாவை மிஞ்சும் அவரின் தம்பி… அசரவைக்கும் பேபி படத்தின் வசூல் சாதனை…!!

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இருந்தாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தொடர்ச்சியாக இவரின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய முழுவதும் பிரபலமானார்.
குறிப்பாக தமிழகத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு பல பெண் ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் விஜய் தேவார கொண்டாவின் தம்பி தனது 2018 ஆம் ஆண்டு தொரசாணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் எந்த திரைப்படமும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் பேபி என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வெறும் 2 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி சில வாரங்களில் 21 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.