தமிழ் சினிமாவில் தற்போது வரை மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் அர்ஜூன். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. சினிமாவின் புகழின் உச்சியில் இருக்கும் இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஐஸ்வர்யா ஏற்கனவே பட்டத்து யானை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார். ஆனால் அர்ஜுனின் இரண்டாவது மகள் குறித்து எந்த ஒரு தகவலும் சமூக வலைத்தளங்களில் அவ்வளவு அதிகமாக வருவது இல்லை.  சமீபத்தில் அவர் தொழிறதிபராக மாறினார்.

அதாவது அஞ்சனா தற்போது ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அவை அனைத்தும் பழங்களின் தோள்களை கொண்டு உருவாக்கி அதனை விற்பனை செய்து வருகின்றார்.

தற்போது அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகின்றார். நடிகர் அர்ஜுன் அவரின் பண்ணையில் அதிக மாடுகளை வளர்த்து வருகின்றார். அடிக்கடி அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அர்ஜுன் அவரின் மகள்களுடன் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Arjun Sarja இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@arjunsarjaa)