LATEST NEWS
நடிகர் அஜித்தின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த பிரபல தமிழ் நடிகர் யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து வசூலிலும் சாதனையும் படைத்துள்ளது. நடிகர் அஜித் சமீபத்தில் பைக்கில் உலகம் சுற்றும் தனது பயணத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்திருந்தார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து அவர் சமீபத்தில் ஏகே மோட்டோ ரைடு என்ற நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இதன் மூலம் பைக்கில் உலகத்தை சுற்றி பார்க்க ஆசைப்படும் பயண விரும்பிகளுக்கு இந்த நிறுவனம் உதவும் என்றும் கூறியுள்ளார்.
துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் அஜித்தின் மடியில் உட்கார்ந்திருக்கும் சிறுவன் ஒரு பிரபல நடிகர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் .அவர் வேறு யாருமில்லை.. அட்டக்கத்தி நடிகர் தினேஷ் தான். தற்போது இப்புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.