சினிமாவுக்காக Bar-ல் வேலை பார்த்த நான் அவன் இல்லை ஜீவன்… பலரும் அறியாத தகவல்.!! - cinefeeds
Connect with us

VIDEOS

சினிமாவுக்காக Bar-ல் வேலை பார்த்த நான் அவன் இல்லை ஜீவன்… பலரும் அறியாத தகவல்.!!

Published

on

தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் ஜீவன். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான யூனிவர்சிட்டி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் இவரின் திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

அதன் பிறகு இவர் நடித்த திருட்டுப் பயலே மற்றும் நான் அவன் இல்லை உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்னர். தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவன் அதன் பிறகு ஹீரோவாக மச்சக்காரன் திரைப்படத்தில் நடித்தார். இவர் இறுதியாக 2015 ஆம் ஆண்டு அதிபர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து அசரீரி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்தார். இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் நட்டி உடன் இணைந்து ஜீவன் நடிக்கின்றார்.

இந்நிலையில் ஜீவன் சினிமாவில் நுழைவதற்கு யாரும் ஆதரவு தெரியாத நிலையில் தன்னுடைய சுய உழைப்பால் முன்னேறினார். அதற்காக அவர் பாரில் வேலை பார்த்ததாக சேயார் பாலு அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

MetroMail இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@metromailtamil)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in