CINEMA
சினிமாவுல அவனவன் அவன் ஜாதி வச்சி படம் எடுக்கிறாங்க….. கொந்தளித்த நடிகர் கருணாஸ்…!!

தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா திரைப்படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் கருணாஸ்.அந்த திரைப்படத்தில் ஒடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் இவருக்கென தனி ஒரு அடையாளமாக மாறிவிட்டது.
இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி, சிம்புவின் குத்து மற்றும் அஜித் உடன் இணைந்து வில்லன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.இப்படி காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி மற்றும் அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இவரின் மனைவி கிரேஸ் என்பவரும் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், இப்போலாம் சினிமாவுல அவனவன் அவன் ஜாதியில நாங்க நசுக்கப்பட்டோம், பிசுக்கப்பட்டோம்னு எடுக்கிறான். ஒருத்தன், நாடகக் காதல் பண்றீங்கன்னு எடுக்கிறான். எங்க அப்பன் என்ன தாஜ் ஹோட்டலா வச்சிருந்தார். கீத்து கொட்டையில எங்களை வளர்த்தார் என்று கொந்தளித்துள்ளார்.