நடிகர் பரத்தின் மகன்கள் இப்படி வளந்துட்டாங்களா?.. செம க்யூட்டா இருக்காங்களே… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் பரத்தின் மகன்கள் இப்படி வளந்துட்டாங்களா?.. செம க்யூட்டா இருக்காங்களே… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பரத். தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பரத் முதன்முதலில் சினிமாவில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து செல்லமே, காதல், வெயில் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதிலும் குறிப்பாக இவர் காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகின் உச்சத்திற்கு சென்றார். அதன் பிறகு இவர் மலையாளத்தில் நடித்த டி 4 பீப்பிள் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆனது.

அதன் பிறகு பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானார். இப்படி பிசியான நடிகராக இருந்த இவர் ஜெஸ்லி ஜோஸ்வா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி துபாயில் பிறந்தவர். அங்கு படித்து பட்டம் பெற்ற பல் மருத்துவர் ஆவார். இதனிடையே திருமணத்திற்கு பிறகு 5 வருடங்களாக குழந்தை வேண்டாம் என்று பாரத் மற்றும் ஜெஸ்லி தம்பதியினர் தள்ளிப் போட்டனர்.

Advertisement

அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே நடிகர் பரத் இறுதியாக காளிதாஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில் தற்போது நடிகர் பரத் தனது மகன்களுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in