“ஜவான் படம் எப்படியாவது ஓடிறனும்”… திருப்பதிக்கு கோவிலுக்கு விசிட் அடித்த ஷாருக்கான், நயன்தாரா.. வெளியான வீடியோ.. - cinefeeds
Connect with us

VIDEOS

“ஜவான் படம் எப்படியாவது ஓடிறனும்”… திருப்பதிக்கு கோவிலுக்கு விசிட் அடித்த ஷாருக்கான், நயன்தாரா.. வெளியான வீடியோ..

Published

on

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடிக்க நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் யோகி பாபு, தீபிகா படுகோனே மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதே சமயம் இந்த படத்தின் மூலம் பாலிவுட் திரை உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக வெளியான பாதாம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது ஜவான் திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் ஜவான் படம் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரின் மகள் சுகானா மற்றும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று இரவு திருப்பதிக்கு சென்று அவர்கள் அங்கேயே தங்கி இன்று காலை சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதிக்கு முதல்முறையாக சென்று உள்ள நடிகர் ஷாருக்கான் வேஷ்டி சட்டை அணிந்து சாமி தரிசனம் செய்த நிலையில் தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in