அனிருத்துக்கு கையில் செக்குடன் 3 புது காரை கண்முன்னே நிறுத்திய கலாநிதி மாறன்… வைரலாகும் வீடியோ…!! - Cinefeeds
Connect with us

VIDEOS

அனிருத்துக்கு கையில் செக்குடன் 3 புது காரை கண்முன்னே நிறுத்திய கலாநிதி மாறன்… வைரலாகும் வீடியோ…!!

Published

on

தமிழ் சினிமாவின் 90களில் தொடங்கி இன்றுவரை சூப்பர் ஸ்டார் என்று அனைவர் மத்தியிலும் இடம் பிடித்த நடிகர் தான் ரஜினிகாந்த. இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் என பல பிரபலங்களும் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் 375 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தற்போது வரை 525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் வெற்றியாள் மகிழ்ச்சியில் இருக்கும் நெல்சன் படம் இந்த அளவிற்கு வெற்றி பெறும் என நினைத்து இயக்கவில்லை படம் நன்றாக வரவேண்டும் என்றுதான் நினைத்து எடுத்தோம் படத்தின் வெற்றிக்கு காரணம் ரஜினியின் திரையால் மை தான் என கூறி இருந்தார்.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிக்கு நேற்றைய பிஎம்டபிள்யூ X7 காரை பரிசாக வழங்கி இருந்தார். இந்த காரின் விலை சுமார் 1.25 கோடி ஆகும். இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் நெல்சன் திலீப் குமாரை நேரில் சந்தித்து காசோலையை கொடுத்த கலாநிதி மாறன் நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக வழங்கினார். இந்த காரின் விலை சுமார் 2 கோடி மதிப்பு என கூறப்பட்டது.

இந்நிலையில் அனிருத்துக்கு மட்டும் இதுவரை எந்த ஒரு பரிசும் கலாநிதி கொடுக்கவில்லை என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் நேற்று செக் கொடுத்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில் ரஜினிக்கும் நெல்சனுக்கும் கொடுத்ததைப் போலவே மூன்று சொகுசு கார்களை நிறுத்தி உங்களுக்கு எது பிடிக்கிறதோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று அனிருத்துக்கு ஆப்ஷன் கொடுத்து கலாநிதி மாறன் தேர்வு செய்யக் கூறியுள்ளார். நெல்சனை போலவே போர்ச் காரை அனிருத் தேர்வு செய்துள்ளார். தற்போது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.