LATEST NEWS
நடிகர் சாந்தனு மட்டும் கிகி விஜய்யின் திருமண புகைபடங்கள்….
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சாந்தனு. இவர் தந்தை பாக்கியராஜ் தாய் பூர்ணிமா பாக்கியராஜ் .இவருக்கு சரண்யா என்ற ஒரு தங்கையும் உள்ளார். இவர் தந்தை மற்றும் தாய் சினிமா பிரபலங்கள்.
தன் தந்தை நடித்த ‘வெட்டிய மடிச்சு கட்டு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார் .அதன் பிறகு தன் தங்கை சரண்யா இயக்கிய ‘பாரிஜாதம்’ படத்திற்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.
அதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு வெளியான’ சக்கரக்கட்டி’ படத்தின் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வெளியான ‘ஏஞ்சல் ஜான்’ என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகமானர்.
இவர் தமிழில் சிந்து 2, கண்டேன் ,ஆயிரம் விளக்கு ,அம்மாவின் கைப்பசி, வாய்மை, முப்பரிமாணம் , போன்ற பல படங்களில் நடித்துள்ளார். எஸ் எஸ் எம் பி 28 என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
2020 ஆம் ஆண்டு வெளியான ‘கோகோநாகா’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். மலையாள அமிர்தா டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் சீசன் 2 மற்றும் சீசன் 3இல் நீதிபதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி நீதிபதியாக இருந்தார்.
நடிகர் சாந்தனு கதை திரைக்கதை வசனம் இயக்கம் ,வாய்மை, எங்க போற டா போன்ற படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் .நடிகர் சாந்தனு கீர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இவரது மனைவி ஒரு தொகுப்பாளினி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இவர்கள் வித் லவ் சாந்தனு கிகி என்ற youtube சேனல் நடத்தி வருகின்றன.
இந்த youtube சேனலில் 679கே சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர் . இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்746K followers உள்ளனர். தற்போது இவர்களின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
