LATEST NEWS
கருப்பு நிற ஷார்ட் உடையில் … டாப் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் ஜொலிக்கும் சூர்யா – ஜோதிகா மகள் தியா… வெளியான லேட்டஸ்ட் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரின் மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்த படத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாவது பாகமும் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது.
இத்திரைப்படத்தை முடித்தபிறகு சுதா கொங்கரா உடன் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் படம் ஆகியவற்றில் சூர்யா நடிக்க இருக்கிறார். தற்பொழுது நடிகர் சூர்யா மும்பையில் செட்டில் ஆகி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிள்ளைகளின் படிப்பு, மற்றும் தங்களின் தொழில் ரீதியான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, மும்பையில் குடியேற ஜோதிகா விருப்பப்பட்டதால், சூர்யா பல கோடி மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி அங்கு குடியேறினார்.
இவர்களின் பிள்ளைகளான, தியா மற்றும் தேவ் இருவருமே, திருபாய் அம்பானி பள்ளியில் தான் தற்போது தங்களுடைய படிப்பை தொடர்ந்து வருகிறார்கள். சூர்யா – ஜோதிகா இருவருமே, தங்களுடைய குழந்தைகள் மீடியா கண்களின் பட்டுவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தாலும், அவ்வப்போது இவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மும்பை சென்றதில் இருந்து அடிக்கடி வெளியாகி வைரலாகி விடுகிறது.
அந்த வகையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா தங்களின் பிள்ளைகளோடு பாந்த்ராவில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு வந்து செல்லும் போது, மீடியாக்கள் இவர்களை சூழ்ந்து கொள்ள சூர்யா முன்னே வந்து போஸ் கொடுத்தார். அப்போது அவரின் மகள் தியா பின்னால் நின்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
• @Suriya_offl anna with his family exclusive 🤩❤️❤️ !!#Kanguva pic.twitter.com/jSChMRLicn
— Maaran Trolls ™ (@Maaran_Trolls) August 11, 2023