LATEST NEWS
அனிருத்துக்கு விருப்பமான ஒன்றை பரிசாக கொடுத்து அசத்திய நடிகர் விஜய்.. அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா?.. வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார். அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார்.
அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளன. இவர் இறுதியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவரின் இசையும் தான். இவர் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 170, கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் விஜயின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய்யுடன் கத்தி திரைப்படத்தில் தொடங்கி மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ என அனைத்து திரைப்படங்களிலும் தொடர்ந்து விஜயுடன் இசையமைப்பாளர் அனிருத் பயணித்து வருகிறார். இவரின் இசையில் இந்த படங்களில் வந்த பாடல்கள் மற்றும் பிஜிஎம் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் கத்தி படத்தின் நேரத்தில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு பிரம்மாண்டமான பியானோ ஒன்றை விஜய் பரிசாக கொடுத்துள்ளார். அது தொடர்பான புகைப்படத்தை அனிருத் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Thank you Vijay Sir for this awesome new Grand Piano. Double-gift for #Kaththi album and movie blockbuster 🙂 pic.twitter.com/f6o0hVLYxN
— Anirudh Ravichander (@anirudhofficial) October 26, 2014