LATEST NEWS
நடிகர் விஜயின் முக்கிய தொழிலே இதுதான்… அடுத்தது தான் சினிமா… இதுவரை பலரும் அறியாத தகவல்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் திரிஷா, அர்ஜுன் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் சினிமாவை தாண்டி தன்னுடைய வளர்ச்சிக்கு எப்போதும் துணையாக இருந்த ரசிகர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் விஜய் உடனே உதவி செய்வார்.
தற்போது கமிட்டாகியுள்ள திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ரியல் எஸ்டேட் தொழிலில் விஜய் அதிகமாக முதலீடு செய்துள்ளாராம். அதனைப் போலவே பல அப்பார்ட்மெண்டுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். திருமண மண்டபங்கள் நிறைய உள்ளன.
குறிப்பாக சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து சினிமாவிலேயே படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகின்றார். மேலும் ஷாப்பிங் மால்களையும் கட்டி அதனையும் வாடகைக்கு விட்டுள்ளார். குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழில்தான் விஜய் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
