LATEST NEWS
நடிகை காயத்ரி இந்த பிரபல காமெடியனை காதலிக்கிறாரா?… இருவரும் நெருக்கமாக வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை காயத்ரி சங்கர். சினிமாவில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடிக்கும் நடிகைகளின் பட்டியலில் இணைந்தவர். இவர் முதல் முதலில் 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் பெரும்பாலும் விஜய் சேதுபதியின் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கான ராசியான நடிகையாக திகழ்ந்த காயத்ரி, விக்ரம் படத்தில் அவரை கொள்ளும் வில்லனாகவும் விஜய் சேதுபதி உடன் நடித்திருப்பார் .
இந்நிலையில் காயத்ரி பிரபல நகைச்சுவை நடிகரான அரவிந்த் எஸ் ஏ என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்தியாவில் ஸ்டாண்ட் அப் காமிக்ஸில் மிகவும் புகழ்பெற்றவர் தான் அரவிந்த் எஸ் ஏ. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஆரம்பம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியாவால் சென்னையில் மிகவும் விரும்பத்தக்க மனிதர்களில் ஒருவராக தேர்வானார்.
இவர் யூட்யூபில் பதிவு செய்யும் ஸ்டாண்ட் அப் காமெடி கிளிப்புகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில் இவரும் நடிகை காயத்ரி சங்கரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அது தொடர்பான புகைப்படங்களை காயத்ரி பகிர்ந்த நிலையில் அந்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.
