விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட் இதோ - cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட் இதோ

Published

on

தமிழ் திரையுலகில் மக்கள் செல்வன் என்றாலே அது நடிகர் விஜய் சேதுபதி தான். இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகன், வில்லன் போன்றவற்றில் மட்டும் இல்லாமல்,ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதரும் கூட. எத்தனை உயரம் தொட்டாலும் மிக சாதாரணமாக எல்லோரிடத்திலும் எளிமையாக பழகக் கூடியவர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு சமூக நல கருத்துக கூறிவருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு இலங்கை அகதியாக தமிழகம் வந்தடைவது போல் நடித்து வருகின்றார்.இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல நடிகை மேகா ஆகாஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அதோடு வரலாறு பட நாயகி கன்னிகாவும் ஒரு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் .இப்படத்தின் ஒன் லைன், அகதியாக இங்கு வரும் விஜய் சேதுபதி எப்படி வாழ்க்கையிலும், தன்னை ஓரங்கட்டுபவர்கள் முன்னால் வெற்றி பெறுகின்றார் என்பதே படத்தின் கதையாம்.

கண்டிப்பாக இப்படத்தை இலங்கை தமிழர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடுவார்கள், ஏன் என்றால் அந்த அளவிற்கு அவர்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. என்பதை படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in