“மேடம் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்”… பிரபல நிறுவனத்தின் மீது புகார் அளித்த நடிகை ஆத்மிகா…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“மேடம் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்”… பிரபல நிறுவனத்தின் மீது புகார் அளித்த நடிகை ஆத்மிகா…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகை தான் ஆத்மிகா. மாடலிங் துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் முதலில் ஒரு குறும்படத்தில் நடித்தார். அதன் பிறகு மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நிலையில் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

அந்தப் படத்தின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கார்த்திக் நிறைய இயக்கிய நரகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் ஆத்மிகா பிரபல ஆப்பிள் மொபைல் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார்.

Advertisement

இஎம்ஐ சந்தா சரியான தேதியில் செலுத்தி ஆட்டோ பே ஆப் செய்த பிறகும் தன்னுடைய கணக்கில் இருந்து 4999 ரூபாயை எடுத்து விட்டார்கள், இ எம் ஐ சந்தா சரியான தேதியில் செலுத்த மறக்கும் சூழலில் அபராத தொகை தவிர்க்க பெரும்பாலான நிறுவனங்கள் auto pay என்ற ஆப்ஷனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

ஆனால் ஆத்மிகா இஎம்ஐ செலுத்திய பிறகும் இந்த தொகையை ஆப்பில் நிறுவனம் தொடர்ந்து மாதம் பிடித்து வருவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். அந்த ஸ்க்ரீன் ஷாட்டை ஆத்மிகா தனது twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in