தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் முதன்முதலாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.
அந்தப் படத்தில் ஹரிணி என்ற வேடத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
பெங்காலி மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் திரைப்படமாக வெளியான சலோ பிக்னிக் மனையேன் என்ற திரைப்படத்தின் மூலம் கலைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தவர்.
அதன் பிறகு பாயும் புலி, அச்சாரம் மற்றும் ஆறாவது சினம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தார். இவர் பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க தொடங்கினாலும் பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் இல்லை.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் பல பிரச்சினைகளில் சிக்கினார். அதுவே அவரை மக்கள் தவறாக நினைக்க ஒரு காரணமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார்.
இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகு இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் இப்போது காதலுடன் காபி, கெட்டவன்னு பெயர் எடுத்தால் நல்லவன்டா,கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர விளையாட்டு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சமீப காலமாக பட வாய்ப்புக்காக கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவ்வகையில் தற்போது க்யூட்டான உடையில் ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.