LATEST NEWS
க்யூட்டான லுக்கில் நயன்தாராவுக்கு டப் கொடுக்கும் சூர்யா பட நடிகை… வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் அபர்ணா பாலமுரளி.
இவரின் இயல்பான நடிப்பு மிக சிறந்த நடிகையாக இவர் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
இது அவர்களின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.அபர்ணா பால முரளி அனைத்து விதமான ரோல்களுக்கும் பொருந்தக்கூடிய முக ஜாடை உள்ளவராகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராகவும் உள்ளார்.
சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக அபர்ணா பால முரளி தேசிய விருது வாங்கிய நிலையில் தற்போது இவரின் நடிப்பில் வெளியாகியுள்ள சுந்தரி கார்டன்ஸ் சென்ற படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சில படங்களிலும் அபர்ணா பாலமுரளி நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் அபர்ணா பால முரளி.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.