LATEST NEWS
பாபநாசம் பட நடிகை ஆஷா சரத்துக்கு இவ்வளவு அழகான மகள்களா?… குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய அழகிய புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தடைக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமான நடிகை தான் ஆஷா சரத்.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பாபநாசம்.
இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பில் அசத்தி ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஆஷா சரத்.
இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் கமல்ஹாசனின் தூங்காவனம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
நடிப்பு ஒரு பக்கம் இருக்க மற்றொரு பொருள் நடன நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து கலந்து கொண்டு நடுவராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் உத்ரா கடந்த 2021 ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்றார்.
மலையாள சினிமாவில் கெத்தா திரைப்படம் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.
இவருக்கும் ஆதித்யா மேனன் என்ற சார்டர்ட் அக்கவுண்டன்ட் பணியாற்றுபவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷா சரத் அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி நேற்று அவர் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.