LATEST NEWS
முதன்முறையாக மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்…. வைரல் வீடியோ இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போதைய கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் கிளாமர் ரூட்டினை ஆரம்பித்த இணையத்தில் போட்டோ சூட் எடுத்து அதனை பகிர்ந்து வருகின்றார்.
அவ்வகையில் நாணியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள தசரா திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த கதாபாத்திரத்திற்காக கீர்த்தி சுரேஷ் மேக்கப் போட்டு தயாராகும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Kitty's makeover as Vennala for #dasara ♥️@KeerthyOfficial #DasaraOnMarch30th pic.twitter.com/vgqmOUW7SY
— Trends Keerthy (@TrendsKeerthy) March 14, 2023