திருமணத்திற்கு பிறகு சட்டென உடல் எடையை குறைத்த மஞ்சிமா மோகன்… சீக்ரெட் என்ன தெரியுமா?.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணத்திற்கு பிறகு சட்டென உடல் எடையை குறைத்த மஞ்சிமா மோகன்… சீக்ரெட் என்ன தெரியுமா?.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!!

Published

on

தமிழ் மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மஞ்சிமா மோகன். கடந்த 2016 ஆம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும் உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடித்தார். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு கலியூஞ்சல் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ஒரு வடகம் செல்ஃபி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படி பிசியாக நடித்து வந்த இவர் தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் உடன் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

Advertisement

அதன் பிறகு இரு வீட்டார் சம்பந்தத்துடன் கடந்த வருடம் இறுதியில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதேசமயம் திருமணத்தின்போது மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதாக கூறி பல கேலி கிண்டல்களும் வைரலானது.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு உடல் எடை குறைத்து வரும் மஞ்சிமா மோகன் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் ஸ்லிம்மாக மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.

Advertisement

அதாவது அவர் Aerial yoga செய்து தான் தனது உடல் எடையை குறைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in