LATEST NEWS
‘அந்த லுக்குல அப்புடியே ஃபிளாட் ஆயிட்டோம்’… சேலையில் கியூட் லுக்கில் நடிகை ஓவியா… அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் களவாணி, கலகலப்பு , மெரினா, மூடர்கூடம், மதயானை கூட்டம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை ஓவியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
படங்களில் நடித்து கிடைத்த பிரபலத்தை விட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். முதன் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்று அறிமுகப்படுத்தியதே நடிகை ஓவியா ரசிகர்கள் தான். இவர் பிக் பாஸ் வீட்டில் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஓவியாவிற்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவர் நடிப்பில் 90 எம்.எல்., கணேசா மீண்டும் சந்திப்போம், ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் ஓடவில்லை. இப்போது ராஜ பீமா, சம்பவம், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஓவியா. இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் ஓணம் பண்டிகையை கொண்டாடி சேலையில் கியூட்டான லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் உள்ளனர் என்றே கூறலாம்.