LATEST NEWS
6ரில்இல்லாத பழக்கம் 56 வயதில் வாயில் சிகரெட்டோடு போஸ் கொடுத்த சரத்குமார் மனைவி.. சர்ச்சையால் வைரலாகும் புகைப்படம்..

தமிழ் திரையுலகில் இளம்வயதில் புகழ் நடிகையாக இருந்தார் தற்பொழுதும் அம்மா கேரக்டர் என்றாலே தற்போது அனைவருக்கும் நினைவில் வரும் நடிகை ராதிகா சரத் குமார் மட்டும் தான். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
மேலும், ராதிகா தமிழில் மட்டுமே சுமார் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். ரஜினி கமல், போன்ற திரையுலகின் முன்னணி நாயகர்களோடு பல படங்கள் இணைந்து நடித்துள்ளார். இதன்பின் தற்போது ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களும் நீண்ட நாட்கள் கழித்து ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட ‘ஆரவ்’ நடித்து முடித்திருக்கும் படம் தான் ‘மார்க்கெட் ராஜா’.
இப்படம் தான் இவர்க்கு தமிழில் முதல் படமாகும். இந்த படத்தில் ஆரவ்விற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராதிகா. மேலும், 56 வயதாகும் ராதிகா சரத்குமார் இப்படத்தில் இவர் நடிக்கும் ரவுடி கதாபாத்திரத்திற்காக சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார் ராதிகா.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களுமா ராதிகா சரத்குமார் 56 வயதில் இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்று இணையத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.