LATEST NEWS
வயசு தான் 40 ஆச்சு, ஆனா இன்னும் 18 வயசு பொண்ணு மாதிரி தான் இருக்கீங்க… செந்தில்குமாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

தமிழில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் செந்தில்குமாரி. பசங்க திரைப்படத்தில் அன்பான அம்மாவாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் மெர்சல் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கொள்ளை கொண்ட இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சமீபத்தில் விஜய் டிவி முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா சீரியலிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது 40 வயதுக்கு மேலாகும் இவர் சீரியல் மற்றும் படங்களில் அம்மா கதாபாத்திரம் மற்றும் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.