LATEST NEWS
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கை பிரபல நடிகையா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. வெளியான புகைப்படங்கள்..!!

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதனிடையே நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு சகோதரி இருப்பது குறித்து பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது நடிகை ஸ்ரீதேவிக்கு ஸ்ரீ லதா என்ற ஒரு தங்கை இருக்கிறார். ஸ்ரீதேவியின் தாய் யங்கர் ஐயப்பன் சிவகாசியில் தனது தந்தையுடன் இருந்து வந்த பிறகு ஸ்ரீதேவி அம்மாவின் தங்கைக்கு ஸ்ரீலதா என்னும் மகள் பிறந்தார். ஸ்ரீதேவி நடிக்கும் காலத்தில் அவரின் சித்தி மகளான ஸ்ரீ லதா ஒன்றாக சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று வருவார்.
ஆனால் ஸ்ரீலதா 1989 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சஞ்சய் ராமசாமியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் இடையேயான உறவு தொடர்பில்லாமல் போனது.
ஸ்ரீதேவியை போலவே ஸ்ரீ லதாவுக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்துள்ளது. அதனால் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் அந்த படங்கள் நல்ல வெற்றியை கொடுக்காததால் தனது நடிப்பை அத்தோடு நிறுத்திக் கொண்டார் ஸ்ரீ லதா.
இந்நிலையில் ஸ்ரீ லதா மற்றும் ஸ்ரீதேவி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.